உழவின்றி உலகில்லை (பொங்கல் கவிதைப் போட்டி)

அடிசில் குடுவையுடன்
அங்கதக் கலப்பையுடன்
அடமானம் வைத்திருந்த
அடவியில் காலெடுத்து
இசையே வருமென்று
இன்முகமாய் உழுதேனே
விசும்பும் பொய்த்ததே
விழும் இடி தலை மேலே.

நான் தான் எனக்குலகம்
நான் செயும் உழவுத் தொழில்
நானிலம் அறியுமது
நல்லதெனத் தெரியும்.
மானியம் பல பெற்று
தானியம் சில வளர்த்து
சூனியம் வந்ததிங்கே
சுரம் வந்து உளறுகிறேன்.

ஏன் தான் இப்படி
ஏர் உழவர் நிர்கதி
ஆனார் என்பதற்கு
ஆகாயமே சாட்சி;
உழவு இல்லையெனில்
உலகும் இல்லையென
உழன்றே சொல்லுகிறேன்
சுழலும் உலகமிதில்.

எழுதியவர் : மேரி ஜெசிந்தா (9-Jan-13, 3:31 pm)
பார்வை : 79

மேலே