உழவின்றி உலகில்லை.. (பொங்கல் கவிதை போட்டி)

நெல்லும் கொள்ளும் நாளும் செய்து,
அல்லும் பகலும் அயராது நிலத்தை நெய்து,
உணவை வழங்கும் எந்தன் உழவன்,
உயிரைத் தந்தது அவனின் உழவு..

நீரின்றி நிலமின்றி,
உழவு தடைபட்டுப் போனாலே,
தேருண்டு ஊர்வலத்திலே,
தினமொருவன் இறுதித் தேரினிலே..

தூது வந்த தெய்வமது,
தூண்டில் போடாது உணவளித்து,
பசித்து வந்த வயிற்றுக்கெல்லாம்,
புசித்துப் போ என்றதது..

வாடும் வயிறுகள் நாடும் உணவை,
தேடல் என்றுமே தீருவதுமில்லை,
உழவனின் பெருமைகளை உரத்துச் சொன்னால்,
உறைந்து நிற்கும் இறைச்சிக் கூட்டமும்..

ஊனின்றி உயிரில்லை,
உணவின்றி ஊனில்லை,
உழவின்றி உணவில்லை,
ஆதலால்,
உழவின்றி உலகில்லை..

எழுதியவர் : பிரதீப் (10-Jan-13, 11:56 am)
பார்வை : 119

மேலே