உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே.... (பொங்கல் போட்டி கவிதை)

உழவே மாயம்... இன்று உழவே மாயம்...
உழவே மாயம்... இன்று உழவே மாயம்...
வயலோடும் வாய்க்காலோடும்
கயலாடும் கண்மாய் யாவும்
விலை போச்சம்மா....
ஏரோடு யார் போவது... நாம் வாடும் போது...
சோறோடு யார் வருவது...

பாரார்க்கு தந்த வள்ளலோ... இன்று...
பாழாகிப் போன தாகுமோ...?
வாழும் வரை தேவைப் படும்...
நாளும் பசி போக்கி விடும்...
உழவாலே வந்தது... உலையாலே வெந்தது...
நெல்லென்ற ஆவியை யார் கொன்றது...?

உழுதாலும் சோடை ஆக்குவார்... இங்கே...
அழுதாலும் மாயை காட்டுவார்...
உழவானது பழுதானதால்...
ஊர் வாழ்வது யாராலதான்..?
கதிராக வந்தது... புதிராகிப் போனது....
நெல்லேந்தும் காணியை யார் கொன்றது...?

நாளையும் நாம் வாழத்தான் மிச்சம் மீதி இருக்குதம்மா...
வேலை செய்தவன் வாழ்வு செழித்திட வழியும் இல்லையம்மா...
காளைகள் பல பூட்டியே செய்த உழவும் மறையுதம்மா...
உழவினது மேன்மையும் உழவனின் மேனியும்
மரணத்தின் விளிம்பில் இருக்குதம்மா...

எழுதியவர் : சூரியவிழி (10-Jan-13, 12:09 pm)
பார்வை : 91

மேலே