தைமகளே வருக...(பொங்கல் கவிதை போட்டி)
தமிழ் பாட்டியின் தாய் வீடு
வழிதனை தான் மறந்தாயோ
பசி பிணியால் நீயும் வாடி
தள்ளாடி வந்து சேர்வாயோ!...
தை மகளே வருக
தங்க சங்கிலியை மீட்டு தருக
பச்சை பூமி இப்போ பாலை வனமா கிடக்குது
உலகு பசி தீர்த்தவனோ பசி பிணியால் சாவறான்...
சோறுடைத்த சோழநாடு சோம்பி போய் கிடக்குது
கள்ளி செடியும் முள்ளு செடியும்
அமோகமா விளையுது...
கலங்காதே தை மகளே
தமிழன் கடன் பட்டாவது
படையல் படைப்பான்
பசி ஆறிவிட்டு போ
மோர் கொடுத்து வரவேற்கும்
வசதி இன்று வாய்க்கவில்லை
நீர் கொடுத்து வரவேற்க
தண்ணீருக்கு எங்கே போவான்
வரும் போதே தண்ணீர் பை
வாங்கி வா தை மகளே
மாக்கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி
வரவேற்க ஆசை தான்
அமங்கள வீட்டுக்கு வருவோரை
ஆரத்தி எடுப்பது முறையோ?
தை மகளே வருக
தமிழன் இன்னம் தன்மானம் இழக்கவில்லை
வருமானம் இன்றியும் வரவேற்பான்
வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தான்!!!....

