தை மகளே வருக.... (பொங்கல் கவிதை போட்டி)

வருக வருக தைமகளே!
வருக வருக..!!
தருக தருக செல்வமகளை!
தருக தருக..!!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!
எங்கும் மங்களம்
தங்கட்டும் தங்கட்டும்
எல்லோர் உள்ளமும்
மகிழட்டும் மகிழட்டும்
நல்மழை பெய்யட்டும்
நீர்நிலை நிறையட்டும்
விளைச்சல் உயரட்டும்
நெற்குதிர் வழியட்டும்
நிம்மதி நிலைக்கட்டும்
மகிழ்ச்சி கூடட்டும்
இன்பம் பெருகட்டும்
வருக வருக தைமகளே!
வருக வருக..!!
தருக தருக செல்வமகளை!
தருக தருக..!!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (10-Jan-13, 6:00 pm)
பார்வை : 589

மேலே