உழவின்றி உலகில்லை ( பொங்கல் கவிதைப்போட்டி )
பார்க்கும் விசையெங்கும் பசுமை
இயற்கையின் இன்பங்களோடு
இவன் விதைத்த உயிர்களை
உதிர உரமிட்டு வளர்க்கிறான்................................
மண்ணில் விழும் வியர்வை துளிகளோடு,
நெல்மணிகள் இவையும் விழுகின்றன
விதையாய் , இவன் உயிராய்....................
இயற்கை அன்னை வளர்க்கிறாள்
மழைத்துளிகளாய் நீர் தந்து
மண்ணில் இடம் தந்து
விண்ணைபார்த்தே நிற்கச்செய்து
வீசும் காற்றில் சுவாசம் பெற்று
நீ சுவாசமும் தந்தாய்
ஓருயிராய் நீ முளைத்த போதும்
உயிர்களுக்கு உணவு தந்தாய்
இவன் உதிரம் பெற்று
நீ உருவு கண்டாய்
இவனுக்கோ உணவும் தந்து
தொழிலும் தந்து
உயிர் தந்த உயிராய் நின்றாய்
இவன் உழவன்
இனிதே உரைக்கிறேன்
நீ இன்றி இவனில்லை
இல்லை இந்த உலகில்லை..........................................
.

