காதலா?
எந்தவித மலர்
உன் முகம்?
எந்தவித கனி
உன் இதழ்கள்?
எந்தவித கவிதை
உன் பார்வை?
எந்தவித மொழி
உன் மௌனம்?
எந்தவித இசை
உனது சிணுங்கல்?
எத்தகைய கலை
உனது கோபம்?
எந்த மதத்திற்கு பண்டிகை
உனது சிரிப்பு?
எந்த கடவுளுக்கு திருவிழா
உனது மகிழ்ச்சி?
எந்த க்ரஹத்தின் நிலவுகள்
உனது விழிகள்?
எந்த தேவதை கண்ட கனவு
உனது அழகிய உருவம்?
என்ன சுவை
உனது முத்தம்?
என்னவளே என்னவித உணர்வு
உன் முகம் பார்க்கும் போது
எனக்குள்
இந்த அழகிய குழப்பத்திற்கு
பெயர்தான் காதலா?
அப்படியென்றால் எனக்கு உன்மீது
காதலா?

