காதல் மழை

சிந்துகின்ற
ஒவ்வொரு
மழைத்துளியும்
நீ தந்த காதல்
நினைவுகளை ஈரமாக்கி
விடுகின்றன...!
உன்
தோளில் சாய்ந்தபடி
மழைக் காலத்தை
நான் சுவாரசியமாய்
ரசித்துக் கொண்டிருந்தது
ஒரு காலம்...!
உன்
காதல்
நந்தவனமெங்கும்
என் கனவுப் பூக்களை
விதைத்துக்
கொண்டிருந்தேன்...!
என்னை சுற்றிலும்
பட்டாம்பூச்சிகள்
வட்டமிட்டுக்
கொண்டிருந்தன...!
ஒரு
சூறாவளியில்
சிக்கிக் கொண்ட
மலரைப் போலானது
உனக்கும்
எனக்கும் இருந்த
உன்னதக் காதல்...!
கடந்து செல்கின்ற
பருவ காலங்கள்
போலவே நீயும்
நடந்துகொண்டாய்...!