பிரிவின் வலி....காதல் பிரிவு மட்டுமல்ல

பிரிவின் வலி பிறக்கும் நேரம்,
உறவின் வலிமை புரிவதும் அன்றே,
இறகை உரித்த இறைக் கோழி போல,
இதயம் ரணத்தில் துடித்திடுதே..

உறவுகள் வளர்த்த உருவமிது,
உணர்வுகள் தாளாமல் அழுதிடுதே,
உணர்ச்சி ஏனோ என்னிடம் நட்பு கொண்டாடுதே,
உறவாடிய நெஞ்சம் வெம்பி நின்றாடுதே..

வாழும் காலம் வாழத்தான் போகிறோம்,
பிரிவினால் வாழ்ந்தால் பயன் தான் என்னவோ,
படர்ந்த பாசம் கொடி முல்லை போல,
படரும் பனியைப் போல எந்நாளும் படிந்திடுமே..

பிரிவின் வலிதான் பிறவிக் கொடுமை,
பிணியின் வழியும் சற்று சகித்திடுவேன்,
நெஞ்சைக் கொள்ளும் பிரிவு வேண்டாம்,
அது தஞ்சம் என்னிடம் கொள்வதும் ஏனோ..

செந்நீரும் சதையும் கொண்ட இதயமது,
கண்ணீரை விதையாய் விதைக்க வேண்டாம்,
தனிமை நாட்கள் என் தேகம் கிழிக்க,
வெறுமை மட்டுமே என் வாடிக்கை தானோ..

வளர்பிறை கொண்டு பிரிவு நிலா வளர,
தேய்பிறை கண்டு இதய நிலா சுருங்க,
ஏக்க வானில் மின்னுமவள்,
என்று தெளிந்து சோகம் தனிவாளோ..!

எழுதியவர் : பிரதீப் (11-Jan-13, 7:48 pm)
பார்வை : 165

மேலே