இன்றைய நிலை (1)

வளர்ந்த நாடு ஏப்பம் விட்ட எச்சில் தான் நம்
குழந்தையின் புத்தக பையில் புத்தகமாக
அதே வளரினம் குழந்தைகள்
அங்கே வானுர்தி செய்து ராக்கெட் விடும்
வித்தையும் அத்துபடி
நாமோ இன்னும் மாட்டுவண்டியில் மணிகட்டுவதையே விளக்கிக் கொண்டிருக்கிறோம்


நானும் கேட்டுவிட்டேன் பிறந்ததிலிருந்து இன்றுவரை இந்தியா ஒரு வளரும் நாடு
-என் குழந்தையும்
சொல்கிறது இந்திய ஒரு வளரும் நாடு.
இந்தியா என்ன மார்கண்டேய பிறவியோ?
என்றும் 16ஆக இருக்க

வாழ்க்கைக்கு தேவையில்லாத கல்விதான் இன்று பத்துவருடம் பள்ளிக்குசென்றும் தாய்மொழியில் தவறின்றி எழுத தெரியவில்லை
பல ஆண்டு படித்து பட்டம் பெற்றும் பணியில் சேர அனுபவமே தேவை படுகிறது
லஞ்சமே ஆசிரியராகிறது மாணவராகிறது
திறமைக்கு இடமில்லை தகுதிக்கு தடமில்லை

யோசித்துப் பாருங்க கணினி காலடி பதிக்குமுன்னே
பட்டம் பெற்று பணியில் சேர்ந்தவர்கள் இன்று கணினியோடு பணியில் இருக்கிறார்கள்
அவர்கள் எந்த கல்லூரியில் கணினி கற்று தேர்வு எழுதினார்கள் .அவர்களின் பணியில் தொய்வில்லையே !

ஒரு நாள் அல்லது இரு நாள் போதும் அவர்களுக்கான வேலைக்கு கணினியை கற்க
தாகத்திற்கு உணவளிக்காதீர் தண்ணிர் கொடுங்கள்;
வாழ்க்கையை சொல்லுங்கள்
வகுப்பறையை கொல்லுங்கள்
கல்வியை மதிப்பெண்ணின் கவுரவமாக கொள்ளாதீர்
உழைப்பின் ஊன்று கோலாக கொள்வீர்
சிந்தியுங்கள்................................................ சந்திப்போம்
(தொடரும் இந்த பயணம் )

எழுதியவர் : bhanukl (11-Jan-13, 8:47 pm)
சேர்த்தது : பானுஜெகதீஷ்
பார்வை : 144

மேலே