உண்மை சிரிப்பு (பெரியாரும் இராஜாஜியும் )
![](https://eluthu.com/images/loading.gif)
பெரியார் காங்கிரசில் இருந்த காலம் .காங்கிரஸ் கூட்டம் ஒன்று நடைபெற இருந்தது .பெரியாரும் இராஜாஜியும் நல்ல நண்பர்கள் .
மகாநாட்டில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது .அதனை தோற்கடிக்க வேண்டும் என்பது இராஜாஜியின் விருப்பம் .இராஜாஜி பெரியாரிடம் சொன்னார் .இந்த தீர்மானத்தை எதிர்துப்பேசுங்கள்என்றார் .
பெரியார் கேட்டார் நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்று ?
அதையெல்லாம் அப்புறம் சொல்லுகிறேன் எதிர்த்து பேசுங்கள் என்றார் .பெரியார் இணங்கினார் .
தீர்மானத்தை அக்கு வேறு ஆணிவேராக்கி தூள் பறக்க அதனை எதிர்த்தார் .
இராஜாஜி விருப்பியதுபோல் தீர்மானம் தோற்றுப்போனது .
பெரியார் இப்போது சொல்லுங்கள் ஏன் என்னை எதிர்க்க சொன்னீர்கள் என்று .
இராஜாஜி சொன்னார் அதுதான் மேடையில் இந்தக்கிழி கிளித்துவிட்டீர்களே நான் என்ன சொல்ல இருக்கிறது ? என்றார் ..