கனவு

ரோஜா மலரொன்று
கருகி உதிர்வதாய்
கனவொன்று
கண்டேன்...

அவசரமாய்
உறக்கம்கலைந்து
உன்னிடம் சொல்வதற்கு
ஓடிவந்தேன்...

நீ மேற்கை நோக்கி
நடந்துகொண்டிருந்தாய்
அழைக்க முடியாத
தொலைவில்...!

எழுதியவர் : சுதந்திரா (2-Nov-10, 7:27 pm)
Tanglish : kanavu
பார்வை : 737

மேலே