சாதி என்னும் தமிழர் தடை.

உலகம் தோன்றி பலமில்லியன் வருடங்கள் கடந்துவிட்டன.இன்னும் பலநூறு மில்லியன் வருடங்கள் இந்த உலகம் உயிர்கள் வாழும் தொகுதியாய் இருக்கும் என்று அறிவியல் எடுத்தியம்புகிறது.ஆனால் இந்த உலகம் என்னும் ஒற்றை உருண்டை நடந்துவந்த பாதையில் அது அடைந்த அனுபவத்தின் வீரியம் அதிகமே.

சிரிக்கும் விலங்காய் மனிதன் இருக்கிறான்.ஆறாவது அறிவு என்பது விலங்கிலிருந்து இவனை அது வேறுபடுத்திக் காட்டவேண்டும். மனித இனம் முழுமைக்கும் உலகளாவிய பார்வையில் அது நிறைவடைந்திருக்கிறதா? என்று எண்ணிப்பார்க்கையில் அது நிறைவை தரும் விதத்தில் இல்லை என்றே சொல்லலாம்.

உலக மனிதர்கள் இனக்குழுக்கலாய் பிரிந்து வாழத் தலைப்பட்டப்பிறகு ஒரு இனக்குழுக்குள் பிரிவினை என்பது அதிகமாய் வைத்து என்னும் அளவில் இல்லை. இந்திய மண்ணில் பிரிவுக்குள் பலநூறு பிரிவென்று சில்லுச்சில்லாய் சிதறிவிட்டது மனிதன் என்னும் முழுமை.

இந்தியம் என்னும் தேசியம்.

இந்திய தேசியம் என்பது பல மொழிகளின் ஒருங்கினைந்த அமைப்பு. தேசியப் பார்வையில்
இந்திய நாடு அனைத்து மாநிலத்திற்கும் சமமான உரிமையை அது தரவேண்டும். ஆளும் அமைப்புகள் சில பிரித்தாளும் கொள்கையை கடை பிடிப்பதன் மூலம் தங்கள் இயக்கத்தின் ஆட்சியை தக்கவைக்க நினைக்கிறது. அதற்காக மக்களிடம் மொழிவாரியான இனவாரியான் பிரிவினைகளை உண்டுசெய்கிறது.
இதுபோன்ற செயல்பாடுகளுக்கு சாதி என்னும் வெற்றுக்குப்பை சரியாய் உதவுகிறது.

பலநூற்றாண்டுகளை பின்னோக்கிப்பார்க்கையில் அவரவர் தொழிலை அவரவர் செய்தனர். யாரும் யாருக்கும் அடிமையில்லை என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.ஆனால் பின்னாளில் ஆரியர் வருகைக்குப்பின்னும் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னும் இந்நிலை முற்றிலும் மாறியது. ஆரிய வர்க்கம் உண்டாக்கிய தொழில்சார் சாதிய கட்டமைப்பு இந்திய மண்ணில் தமிழர்வசம் பிரிவினை வாள் முளைக்க ஆரம்பித்தது.

இன்றைக்கும் தென்னிந்திய முழுமைக்குமான பகுதி அறிவியல் வளர்ச்சியில் வளர்ந்து உலக அரங்கில் முன்னோடியாய் வர வாய்ப்பில்லாததாய் இருக்கிறது. காரணம் சாதி என்னும் புழு. மேலை நாட்டவர்கள் உருவாக்கிய அறிவியல் புதுமையை பயன்படுத்தவே இத்தனைக் காலம் என்றால் நாம் என்று புதிய அறிவியல் கருவியை உருவாக்குவது என்று சிந்தித்தால் நமக்கு தடையாய் சாதி என்னும் புல்லுருவியே எதிரில் வந்து நிற்கிறது.

நம்மை இந்தியன் என்றோ! தமிழன் என்றோ! அது சிந்திக்க விடுவதில்லை.அறிவியல் சிந்தனைகள் இலக்கியத்தில் இருக்கிறது. வாழ்வியல் நிலையில் கருவி வகைப்பாடாய் எதுவுமே இல்லாதநிலையில்
வெற்றுப்பெருமை பேசி காலங்கடத்துவது வீணே.
நமக்கிருக்கும் தடையொன்று சாதி என்னும் சழக்கு.

இந்த பிரிவினை எண்ணம் நம்மை விலங்கு நிலைக்கு இட்டுச்செல்வதுமட்டுமல்லாமல்
நம்மை சிந்திக்க விடாத ஆயுதம் என்றே சொல்லலாம்.

சாதியை ஒழிப்பதன் மூலம்தான் நாம் நம் தமிழினத்தின் அறிவுப்புதையலை காக்கமுடியும்.இந்த எண்ணம் அனைத்து தமிழார் மனதிலும் வேரூன்ற வேண்டும்.அவ்வெண்ணம் வராதவரை தமிழர்கள் இட்டலியை உடைத்து உப்புமா மட்டுமே கண்டுபிடிக்கமுடியும்.

எழுதியவர் : விமல் (12-Jan-13, 9:19 pm)
பார்வை : 202

சிறந்த கட்டுரைகள்

மேலே