பொங்கலோ பொங்கல்...

பொங்கிடும் உலையில் பொங்கல்
புதுநெல் லரிசிப் பொங்கல்,
தங்கிடும் மகிழ்ச்சி எங்கும்
தைமகள் வரவில் பொங்கும்,
மங்கிடும் பழமைத் தடைகள்
மலர்ந்திடும் புதுமைப் படைகள்,
அங்கமாய்க் கொண்டோம் நன்றியை
அறுவடைப் பொங்கலாய் இன்றே...!

கரும்பும் மஞ்சளும் பழமும்
கதிர்நெல் லரிசிப் பொங்கலும்,
விரும்பும் உறவுடன் சேர்ந்தே
வீட்டின் முன்னே படைத்து,
இருளைப் போக்கும் கதிரும்
இனிதாய் மகிழப் பணிந்தே,
ஒருவருக் கொருவர் வாழ்த்திட
ஒன்றாய்ச் சேர்க்கும் பொங்கலே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Jan-13, 2:32 pm)
பார்வை : 99

மேலே