பெண்ணே
என்னை அழ வைக்கவா
அவதாரம் எடுத்தாய்?
என் கண்களுக்குள்
கலவரம் செய்தாய்
என் விரல்கள் தொட்டு
விருந்து வைத்தாய்
இதழ்கள் பதித்து
இன்பம் பூசினாய்
மோகதீயில் முழுதாய்
எரித்தாய்
தாகம் தீர
மேகம் பறித்தாய்
தேகமெல்லாம்
யாகம் வளர்த்தாய்
யோகம் நானென்று
நீந்தி குளித்தாய்
ராகம் நான்பாட
தேகம் கொடுத்தாய்
கனவா நினைவா
எல்லாம் நடந்தது
இமை கொட்டும் நேரத்தில்
என்னை மறந்தது ???