அவள்செலுத்தும் அன்பின் அரவணைப்பில்.......

அவள்செலுத்தும் அன்பின் அரவணைப்பில்
எனை மறந்தேன்; இதயம் முதன்முறை திறந்தேன்

நிகழ்காலம் மறக்க
நின்மடியில் விழுந்தேன்

காலம் கண்கள்நனைக்க,
களைப்பில் கண் அயர்ந்தேன்;
மனக் கலக்கம் நான் துறந்தேன்

மடியில் துயில்கலைந்த சிறுபிள்ளையாய்,
சாந்தமோடு நான் விழித்தேன்;
மனச் சலனமின்றி நான் இசைந்தேன்

அவள் கண்மலர் கண்டுநான் எழுந்தேன்
புதுவசந்தம் பிறக்க நான் மலர்ந்தேன்;
மகிழ்ந்தேன் அவள் அரவணைப்பில்
கையோடு கைகோர்த்து நான் நடந்தேன்;
இவ்வாழ்க்கைப்பயணம், இன்றுமுதல்
இனிதேதொடர நான் முனைந்தேன்........


அவள்,
என் மனைவி! - இவள்
அன்போடு அரவணைப்பதில், என் தாய்!
உரிமையோடு கண்டிப்பதில், என் தந்தை!
தோளோடு தோள்கொடுக்கும், என் தோழி!


- A. பிரேம் குமார்


(சிறுகுறிப்பு: இப்படைப்பை, ஒரு படைப்பாளியின் கண்ணோட்டத்தில் பார்க்கவும். ஏனெனில், நான் இதுவரை திருமண மாகாதவன்; தவறான கருத்துக்கள் தவிர்க்கவே இதனை முன்னரே கூறுகிறேன். நன்றி)

எழுதியவர் : A பிரேம் குமார் (14-Jan-13, 7:51 am)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 157

மேலே