பொங்கட்டும் பொங்கட்டும்
இல்லங்கள் தோறும் தமிழ் உள்ளங்களில் பூத்திருக்கும்
இத்திருநாள்
சாந்தமான இப்பொழுதினில்
பானை வைத்து
பொங்கிடும் பொங்கலில்
பொங்கி எழ வேண்டும் அமைதியும்
ஆத்மாக்களின் சாந்தியும்.
பாகுபாடு கோத்திர வெறி
சனனாயகம் செத்துப்போன கல்லுள்ளங்கள்
மிருகத்தனமான காட்டுமிராண்டிகளின் வன்புணர்ச்சி
எல்லாம் மரணித்துப்போக
மாண்புமிகு மானிடம்
இம்மண்ணில் தலை ஓங்கி
சனனாயகம் தலை தூக்கி
நறுமலர்ச் சோலையில்
வீசும் வாசனைகள் போன்று
உலகம் எங்கும் சமாதான ஒளி வீச
இத் தருணம் ஒளிமயமான தருணமாகட்டும்.