கலியுக காகம்
பெண்ணின் கேள்வி
உண்ணும் உணவு கிட்டியதும்
உடனே உண்டு மகிழாமல்
உன்னினம் உண்டபின் உண்பது ஏன்
உன்னதமான காகமே நீ
காகத்தின் பதில்
உன்னதம் ஒன்றும் இதிலில்லை
உண்மைக்கு கொஞ்சமும் இடமில்லை
மாமியார் மருமகள் சண்டையிடுவோர்
மறைவாய் உணவினில் விஷமிடுவார்
உண்ணும் உணவு கிட்டியதும்
உடனே உண்ணும் குணமிருந்தால்
என்னுயிர் முதலில் போகுமன்றோ?
உண்ணும் உணவில் விஷமிருக்கும்