சொல்லாத காதல்

ஒரு
முன் பனிக் காலத்தில்
பின் பனி வேளையில்
குளிரின் குறும்பினால்
மார்பின் குறுக்கே
கைகளைக் கட்டிக்கொண்டு
ஜன்னலில் அமர்ந்திருக்கிறது
நிலா !
உனக்காக என்னால்
ஆயிரம் கவிதைகள்
எழுத முடியும்...
ஆனால்
எழுதாத பக்கங்களில்தான்
என் காதல்
ஜீவனோடிருக்கிறது!
என் சொல்லாத காதலினை
சொல்லத் துடிக்கும்
மௌனத்தினை
சொல்லிவிடத் துணிந்து நான்
வார்த்தைகளைத் தேடுகிறேன்
தலைக்கனம் பிடித்த தமிழ்
தலைதெறிக்க ஓடுகிறது!
ஆடைகளைச் சரிசெய்யும்
ஒவ்வொரு முறையும்
என்னைக்
கலைத்துப் போடுகிறாய்!

எழுதியவர் : வெற்றி (14-Jan-13, 10:41 am)
Tanglish : sollatha kaadhal
பார்வை : 117

மேலே