மனமுள்ளோர் மணம் பெறுவார்

பூக்களே...! நீங்கள் எல்லாம்
சூல் கொள்ள வேண்டும்
என்பதற்காகவா,வண்டுக்கு
விருந்து வைக்கிறீர்கள்...?

அன்றியும் ...

பட்டாம் பூச்சிகளின்
பசி போக்குகிறீர்களே ...
செவிலித்தாயா ....?

சுயநலமா....? பொது நலமா....?

நீங்கள் மொட்டிலிருந்து
மலர்ந்து ,மணம்பரப்பி
பசியாற்றி வாழ்ந்து
முடித்த போது

புவியன்னை ஒருமுறை
தன் சுழற்சியை ,முடித்திருப்பாள்

ஆனால் ,
எங்களின் வாழ்வுதன்னில்
சுகந்தமான சுற்றுகள் ...எத்தனை.. ?
எதிர்பார்புச் சுற்றுகள் ..எத்தனை..?

ஏமாற்றச் சுழல்வுகள்...எத்தனை..?
துக்கத்தில் சுழல்வுகள்தான் ..
எத்தனை எத்தனை..?

.........எவரெல்லாம் எங்களுக்கு ,.....................செவிலித்தாய்.....?

எழுதியவர் : Minkavi (14-Jan-13, 1:56 pm)
பார்வை : 150

மேலே