உன் பேருந்து பயணத்தில்..

வெண்ணிலவும் உனை
பின்தொடரும்
என் நினைவுகளாக...!
வீசும் தென்றல்காற்றும்
உனைத்தழுவி...
நலம் விசாரித்து செல்லும்...
என் தூதுவனாக...
நீ பேருந்தில் முன்னோக்கி செல்லும்பொழுது...
பின்னோக்கி செல்லும்
காட்சிகளாய்...
நான் மட்டும்...
உன் நினைவுகள் சுமந்து...
பிரியா விடை தந்து...
பின்தொடர்ந்து வருகிறேன்...
வழியெங்கும்...
சென்று வா என்னுயிர்த்தோழியே...!

எழுதியவர் : ராஜதுரை மணிமேகலை (16-Jan-13, 7:44 am)
பார்வை : 148

மேலே