ம்மா க் கோலம்

அங்கொரு புள்ளி
இங்கொரு புள்ளி
எங்கோ ஒரு புள்ளி
மேலும் கீழும்
அலங்கோலமாய் சில கோடுகள்

போட்டு முடித்துவிட்டு
" எப்டிப்பா இருக்கு என் கோலம் "
என்ற என் தேவதையை
உற்று பார்த்து சொன்னேன்
"சூப்பர்டா குட்டி".
மகிழ்ச்சியோடு சிரித்தவளின்
முகத்தில்
அழகான
புள்ளியில்லா
ஆயிரம் கோலங்கள்.

எழுதியவர் : கே. ரவிச்சந்திரன் (16-Jan-13, 1:20 pm)
பார்வை : 168

மேலே