சாதனை

கொஞ்சுமெழில் விஞ்சிநிற்கும்
மழலைமுகம்..
சுருண்ட கார்குழலும்
சுந்தரிக்கு அழகு சேர்க்க.

கல்வியில் கலைவாணியாய்
நடனத்தில் மாதவியாய்
தஞ்சை ஓவியமாய்.
கலைமகளின் ஆசிபெற்ற
கன்னியவள்
கலைப்பயணத்தில்
கலாச்சாரமும் வேலிபோட..

‎”சாதி”க்க
துடிப்பவளுக்கு
‎”சாதி”யும் தடையாக....

ஆதர்ச தம்பதியாய்
விளங்கவே..
பதிக்கேற்ற சதியாகி
கலைக்கு சதியாகும் அன்னை...

பதியின் மதியும் விதியாகி
விளையாட்டை விரும்பும்
கன்னியிவளின்
கலைப்பயணத்தில்
படிக்கல்லே தடைக்கல்லாய்..

விரும்பி கலைமேடையேற
துடிப்பவளுக்கு
விரும்பா கலாச்சார
வேடமணிவிக்கும் பெற்றோர்கள்..

சாதி மதித்து விதிக்கு
இரையாவாளோ..??

சாதி முறித்து
கலைப்பயணத்தில் சாதிக்க...
வீறுகொண்டெழுவாளோ..??
விதிநொந்து வீழ்வாளோ...???‎

எழுதியவர் : காயத்ரி வைத்தியநாதன் (17-Jan-13, 4:57 pm)
பார்வை : 350

மேலே