THAI MAMAN
தாய் மாமன்
தாய் மாமன் உறவு அது தனி உறவு
மடியில் உட்கார வெச்சு காது குத்தும் போது
நான் சிரிக்க நீ செய்த கோமாளித்தனம்
உன் மதிப்பு அப்போது தெரியவில்லை
அப்பா அம்மாக்கு அப்புறம்
எல்லாமே மாமா தான்
அது தான் இந்திய கலாச்சாரம்
என்று சொன்ன போது
எனக்கு புரியவில்லை
இன்று எனக்கு ஒரு மருமகளும் மருமகனும் வந்ததும்
அவர்களுக்கு நான் எல்லாம் செய்யும்போது
மாமன் என்ற உறவு புரிகிறது
சும்மாவா சொன்னங்க ?
நாய் நரியா பெரந்தாலும்
தாய் மாமன் தொன வேணும்
அப்பத்தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியு
ராசாவே நண்பனாலும்
அந்நியன் தான் அவன் என்னைக்கும்
காசு பணம் கொடுக்கட்டாலும்
தாய் மாமன் தாய் மாமன் தான் .....