என்ன தவம் செய்வேனோ

விளக்கு எறியும்
வினாடிக்காக
கை பேசியில்
என் கண்
வரும் அழைப்பு
நீயோ
எனும் ஏக்கத்தில்
என மனம்
ஓசைக்குள்
உன் குரலை
தேடும்
என செவி
உன் சொல்
மட்டுமே
அர்த்தம் கொள்ளும்
என் அறிவு
உன்னுடன்
மட்டுமே
பேச துடிக்கும்
உதடுகள்
உனக்காகவே
காத்திருக்கும்
என் உயிர்
என் நிலை
நீ அறிய
என்ன தவம் செய்வேனோ

எழுதியவர் : minnal (17-Jan-13, 5:27 pm)
சேர்த்தது : minnal
பார்வை : 81

மேலே