மாற்றுத் திறனாளிகள்
வானில் பறக்கும்
பறவை போல்
இருந்து விட்டால்
பறந்து விடலாம்....!
பூமியில் விழும்
மழையை போல்
இருந்து விட்டால்
எழுந்து விடலாம்....!
கடலில் வாழும்
மீனை போல்
இருந்து விட்டால்
மிதந்து விடலாம்....!
மண்ணில் மறையும்
விதையை போல்
இருந்து விட்டால்
புதைந்து விடலாம்....!
காற்றில் கரையும்
பனியை போல்
இருந்து விட்டால்
உறைந்து விடலாம்....!
ஆனால்...?
இவர்களுக்கு இதில்
எதுமில்லை
மனிதனாய் பிறந்தும்
சிறகில்லை
ஆனால்,
இவர்களுக்குள் தான்
எத்தனை, எத்தனை
திறமைகள்!
அத்தனையும்
கடவுள் தந்த
கடமைகள்!
மாற்றி அழைக்கலாம்
இவர்களை இனி
"மாற்றுத் திறனாளிகள்"
என்று!