மறியும் மாரியும் ஒன்றே !

1)அம்மா என்றே அழைக்கப்படுவதாலும்,
எல்லோருக்கும் பொதுவாக இருப்பதாலும்.

2)விண்ணுக்கு எடுத்துக்கொள்ளபடுவதாலும்,
மண்ணுக்கே திரும்ப வருவ தாலும்.

3)மேலிருந்தே தோண்றுவதாலும்,
தாழ்வான இடங்களுக்கு தேடிவருவதாலும்.

4) அப்பத்தை உருவாகசெய்வதாலும்,
தாணும் உணவாக இருத் தலாலும்.

5) எம்மண்ணுக்கு வந் தாலும்
அவ்வியல்போடு கலத்தலாலும்.

6) பலவாறாக சமைக்கபடு வதாலும்,
சில கூராக அமை வதாலும்.

7)அணைத்தையும் உயர செய்வதாலும்,
மூழ்கவிடாமல்தாங்கிநிற்ப்பதாலும்.

8)அழுக்கை நீக்கிதூய்மை படுத்துவதாலும்,
அறுப்புக்கு துணைபோவதாலும்.

9) அணைக்கு இடைபுகுவதாலும்,
தீவணத் தொட்டியை நிரப் புவதாலும்.

10) பலிக்கு வருவதாலும்,
இலையைவிரும்புவதாலும்.

11) தீயதுக்கு எதிராக இருப்பதாலும்.

மறியான நீரும்.
மாரியான நீரும்.
ஒன்றே என கண்டேனே.

ஜெ, ஜி, ரூபன், 29/12/2011.
பி.கு

மறி=
மேரி
ஆடு

மாரி=
மாரியம்மன்,
மழை,
தண்ணீர்.

எழுதியவர் : ஜே.ஜி. ரூபன் (17-Jan-13, 5:50 pm)
சேர்த்தது : ரூபன் ஜோ கி
பார்வை : 183

மேலே