வலித்தது
ஒரு வலியின் பயணம்
எத்தனை தூரம்
நீண்டிருக்கிறது என்பதை
அறிய முற்பட்டபோது
சற்று குறையத் தொடங்கியிருந்தத ு
வலிந்து அதன் மறுமுனை
சென்றடைந்தபோது
முற்றிலும் மறைந்துவிட்டிரு ந்தது
அந்த வலி
இப்போதெல்லாம்
வலிகளின் வழிமுறைகளைக்
கண்டுகொள்வதேயில ்லை
ஒரு வலியின் முடிவு
தேவதைகளால்
ஆசிர்வதிக்கப்பட ்டது
என்பதை அறிந்த கணத்திலிருந்து