பொற்காலமே

கற்பனையில் முகம் தறித்து
கனவுகளில் தத்தளித்து
பொழுது போக்கினில்
சுகம் கண்டு
வாழ்வுதனை
இன்பமென கழித்த
அந்த
குழந்தைப் பருவம்
பொழுதினை கண்டு
ஏங்கிய நாட்கள் உண்டு…
கடந்து போன
காலத்தையெண்ணி
கடக்க வரும்(ங்)காலத்தை
புதைக்க விருப்பமில்லை
கருவினிலே
கருவினை
அழிப்பதைப் போல்…
நான் புரிந்தது
இது தான்
“கடந்தகாலம் எப்போதுமே
கடந்த காலமே”
“கடக்கும் காலம் நமக்கு
நல்ல காலமே”
“கடக்க போகும் காலம்
நமக்கு பொற்காலமே”…