கடிகாரம்

சுற்றும் சுற்றும் கடிகாரம் -மனிதர்களை
சுறுசுறுப்பாக்கும் கடிகாரம்.
நின்று நின்று சென்றிடினும்
வென்று வென்று ஓடிடினும் -உன்
அழகிய முகத்தை நோக்கியே - எங்கள்
அவசர உலகில் பயணிப்போம் .
காசுக்காக இல்லாமல்
கடமைக்காக இல்லாமல்
உலகத்தை இயக்க வேண்டுமென்று
உண்டால் உறங்கினால் உன்னதபணி
உருத்தெரியாமல் போகுமென்று
ஊண் உறக்கம் எதுவுமின்றி
பாராபட்சம் எதுவுமின்றி
ஓயாதுழைப்பவன் நீயல்லவா!
உலகமியங்குவதும் உன்னாலே
உற்சாகமாவதும் உன்னாலே
உலகின் தத்துவம் உன்னுள்ளே
உயிரின் நொடியை கணிப்பவனே
மனத்தால் பேசி மாற்றம் செய்யும் மகத்தானவனே!
எத்தனை உறக்கத்தில் நானிருந்தாலும்
எள்ளளவும் களைப்பின்றி
சொந்த குரலை கொண்டே நீயும்
சுறுசுறுப்பாக்கி விழிக்க வைப்பாய்
சோம்பலை நீயும் விரட்டி நிற்ப்பாய்
சாதனை ஓட்டத்தை தொடர வைப்பாய்.