நான் இன்று...

எனக்கென்று என்ன
வேண்டுமென்று நானே
அறியாததொரு மண்டு...

வாழ்வின் குழப்பத்தை கண்டு
மறைந்து நின்று வாழும்
மாங்கொட்டை வண்டு...

வண்ணமிகு குடில்தனைகொண்டு
வசதியாக வாழும்
வாழைத்தண்டு...

பெற்றோரின் ஆசை குளத்தைகண்டு
அக்குளத்தினுள் அவர்களுக்காக
நீந்திக்கொண்டு....

மனக்கன்று மனதில்
நட்டவனை கண்டு
மருகியே நானும் இன்று..

உனக்கென்று உயிர் வாழவே
பிறந்தேனோ அன்று..
புரியாமலே நானும் இன்று...

தனக்கென்று தன் வசம்
ஏதுமின்று தரணியே
தஞ்சமென்று நினைக்கும் மனமின்று..

தமிழ்மொழியின்
சுவை கண்டு
தற்போது அதனுள் மூழ்கிக்கொண்டு...

நல்லதொரு தலைப்பு கண்டு
நாளும் அதற்கான வரிகளை
தேடிக்கொண்டு....


-PRIYA

எழுதியவர் : PRIYA (20-Jan-13, 3:40 pm)
பார்வை : 109

மேலே