கல்லூரி
எங்கிருந்தோ வந்து
ஏதேதோ கதைகள் பேசி
மின்னியல் வகுப்பினிலே
முதல் வரிசையில் அமர்ந்து
ஆசிரியர்களிடம் வம்பிழுத்து
அட்டூழியங்கள் செய்து
அரியர்கள் பல வைத்து
மூன்று வருடங்கள் முடிவதற்குள்
முப்பது கடிதங்கள் எழுதி
இருபது கடிதங்கள் டிபார்ட்மெண்ட்க்கு
பத்து கடிதங்கள் காதலிக்கு..........
அதில் ஒருத்தியை தேர்வு செய்து
புத்தகங்களை எடை போட்டு
அதில் வந்த பணத்தில்
மொபைலுக்கு ரீசார்ஜ் செய்து
இரவு முழுக்க கடலை போட்டு
கல்லூரி முடிவில் படிப்பிழந்து
பிகரையும் இழந்து சோகத்துடன்
வேலையும் கிடைக்காமல் பைத்தியமாய்
தெருவில் அலையப் போகும்
கல்லூரி மாணவர்கள் நாங்கள்..............