பயணம் பேருந்தில்
தினமும் முத்தமிடுகிறது
பேனா
உன் உதட்டை
என்னைபார்த்து
ஏளன சிரிப்புடன்...
கிடைத்தது
ஒரு வாய்ப்பு,
உன்
விரல் கோர்த்து
நடனமாடுகிறது
என் பேனா,
உன் புத்தக மேடையில்
உதிரம் சொட்ட சொட்ட,
கவிதைகளாய்..
மன்னிக்கவும்,
வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டு விட்டது..
மறுநாள் வாய்ப்பு கிடைத்தது
எனக்கும் அல்ல, பேனாவிற்கும் அல்ல
இன்று பேனாவின் பயணம்
என்னுடன் படியில்..
என்
புத்தகத்தின் பயணம்
ஆவலுடன் மடியில்..
அதன் மறுநாள்
அவள் இருக்கையின்
பின் இடம் கிடைத்தது
என்னவளை பார்த்தேன்
இமைக்க மறந்து
கண்ணில்
மண் தூவி
இமைக்க சொன்னது மணல் லாரி..