பூவும் காதலும்

மாலை நேர மயக்கத்திலே
மதி இழந்து போகையிலே
தோழா
முதல் முறை அனுபவம்
கொன்றை பூவை எடுத்தது
ஒரு முல்லை சூட்டிய
தாமரை போன்ற முகம்
கொண்டவள் அவள் .
மல்லிகை மனம் கொண்டவள் அவள் .
ரோஜா பூவின் அழகை கொண்டவள் .
பல வருடம் பூக்க காத்திருக்கும்
குறிஞ்சி பூவாக ஆகினேன் .
சூரிய காந்தி பூ போல
உன்னையே
உன்னையே பார்த்து நின்றேன் .
இரவு வேளை உன்னை பார்க்க
அந்தி பூ பூக்க வேளை வந்தது .
பூவும் காதலும் ஒன்றை ஒன்று சார்ந்தது

எழுதியவர் : (21-Jan-13, 9:18 pm)
சேர்த்தது : venkatesh k m
பார்வை : 71

மேலே