எலும்பு அள்ளப் போகிறோம்...

உப்புக்காற்றின் துவர்வாடை
மீறியும் வந்து விழுகிறது
பிணவாடையின்
அழுகுரல்கள்.....

சொந்த அடையாளம்
உரித்தெறிந்து
புலம்பெயர் புதுமை சூடி மகிழும்
எங்களுக்கு பக்திமாலையும்
நடிகையின் பேட்டிகளாகவுமே
கழிந்து போகின்றன
தமிழ்ப்புத்தாண்டுகள்.....

சரவணபவன் சாம்பாரும்
ஐம்பது காசு சில்லரையுமாகவே
சாதாரணமாக
உணர்ந்துகொள்ளப்படுகிறது
ரத்தம் தோய்த்து வரும்
செய்திகள்..

தொகுப்பாளினியின் தற்காலிக
காய்ச்சல் கண்டு கதறிப் பதறும்
நாங்கள்...
நிர்வாணக் கொலைகளின்போதும்
இறையாண்மை காப்போம்..

"யாருமே இல்லாம யாருக்குடா?"
என்பதைப்போல்
முப்பாட்டன் பிணம் மீது
பொங்கல் வைத்துக்கொண்டாட
ஆர்ப்பரித்து வருகிறோம்
புதியதாய்
திறந்த நீர்ச்சாலையில்..

காத்திருங்கள்.....
கண்மணிப்பாப்பாக்களின்
ரத்தக்குழைவும்
சதைத்துண்டுக்களுமாய்...

எழுதியவர் : சரவணா(சர்ச்சையன்) (22-Jan-13, 7:06 am)
பார்வை : 117

மேலே