என்னை நான் நம்புகிறேன்

துள்ளிப் பார்த்தபோது
தொட முடிந்தது வானத்தை

எண்ணிப் பார்த்தபோது
எழுத முடிந்தது கவிதையை

முழுதாய் முயன்ற போது
முட்ட முடிந்தது இலக்கினை

என்னை நம்பிய போது
எல்லாம் முடிந்தது நொடியினில்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (22-Jan-13, 7:16 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 117

மேலே