முதல் தொடக்கம்....

சிலப்பதிகாரமாய் மணிமேகலையாய் சீவகசிந்தாமணியாய் வலையாபதியாய்
குண்டலகேசியாய் எம்முள்
நிறைந்து என் மனதில்
சிம்மாசனம் இட்டு
அமர்ந்திருப்பவள் நீ....!
இலக்கணம் கற்கும் முன்னே என்
நாவில் தவழ்ந்தவள் நீ....!

முதல் முறை நான்
பேசிய மழலை
வார்த்தைகள் கண்டு
உன்னையே
எனக்கு
வரமாய் கொடுத்தவள் நீ ...!

உன்னாலே என்
உள்ளம் எங்கும் காதல்
உனக்காகவே என் நேசம்
உனக்காகவே என் சுவாசம்

நீ என்னோடு இருப்பதால்
நானும் கூட
மேதை தான்...!
நீ இன்றி போனால்
நான் வெறும் ஊமை தான்...!

உன்னாலே பல
மொழிகளும் அறிந்தேன்
இருந்தும் வியந்தேன்...!
உன்னைப்போல்
எம்மொழியும் இல்லை....!

உன் பாதங்களில் தான்
வேதங்களையும் கற்றவன் நான்..!
உன்னாலே இன்று
உறவாடினேன்....எல்லோரோடும்....

நீ இன்றி போனால்
வார்த்தைகள் கூட தள்ளாடும்...!
மவுனம் மட்டும்
மொழியாய் உறவாடும்...!
சைகைகளே துணையாய்
இன்னும் வாழ்ந்திருப்போம்
இலை தழைகளோடு
காடுகளில் ஆதிமனிதனாய் மட்டும்...!

எழுதியவர் : மதன் (24-Jan-13, 4:56 pm)
சேர்த்தது : madhanmanmadhan
பார்வை : 85

மேலே