வெறும் மாயத் தோற்றம்

வளி மண்டலங்கள் முழுதும்
வான்புகை மூட்டம்அலையலையாய்
வெண் பஞ்சின் கண்களை ஏன்
கசக்கி அழ வைக்கிறாய் ..!

வெம்பி எழுந்து மூச்சடைத்து
மறைந்து மறைந்து
துளி துளியாய் தூபம் போல்...

தீண்டும் சுவாலைகள் எங்கிலும்
பூமி முகத்தில் தெறித்திடும்
வானழகனின் உதிரங்கள்
ஓசோன் ஓட்டைகளாயின...!

ஏனடா மனிதா ?இந்த வேடம் ..

வெறும் மாயத் தோற்றம்
முக்காடு போடும் சடங்குகள்
அலங்காரத் தோரணையே !

தலைத் தேங்காய் பிளந்து
அகலக் கண்விழித்து புலிமுகமாய்
மஞ்சப்புலிப்பல்லுடன் ஆடும் ஆட்டம்
உல்லாசக் கூட்டம் தெருவீதியிலே !

மனிதர்கள் செய்யும் குற்றங்கள்
அலங்காரப் புலியாட்டம் பலியாடாய்
கள்ளிச் செடி போல
சுமந்த பாவங்கள் தீருமென்று...

ரத்தவெறி களரிகளாய்
அப்பாவிஆடுகோழிகளின்
பச்சை ரத்தம் குடிக்கும் மூடர்கள்
மேலும் மேலும் கூச்சலிட்டே
பரிகாரமாய் பாவத்தை தேடியே
தெரு வீதியில் கொண்டாட்டமாய் ..!

ஏனடா மனிதா?இந்த வேடம் ..
உனக்குப் புரியாதா மனிதா..!

தியானம்தான் நிகழ்கிறதே
பறவைகளிடம் கூட
மாயச் சடங்குகளை நீக்கினால் ...!

பறந்தபடியே செங்குத்தாக
நேராக ,மேலும் கீழுமாய்
மல்லாந்தபடியே ..எதிரே ..பின்னே ..முன்னே ..
வளைந்து வானில் குதித்து எம்பி உல்லாசமாக
ராகம் இசைத்தபடியே
தியானித்தபடியே
ஆகாய வீரர்களாய் !

ஏனடா மனிதா ?உனக்குப் புரியவில்லையா ?

மாயச் சடங்குகளை நீக்கினால்
சர்க்கஸ் காட்டும் வித்தைகாரர்கள் போல்
வெறும் போலியானவை
சடங்குகளெல்லாம்
உன்னையும் உறவையும் ஏன் ?
ஊரையே ஏய்க்கும் வெறும் மாயை ..

மனிதா உனக்குப் புரியவில்லையா ..!!

எழுதியவர் : ஜெய ராஜரத்தினம் (24-Jan-13, 5:28 pm)
பார்வை : 114

மேலே