வாழ்க்கை

மனிதா!...
உள்ளத்தில்
கவலைகளும்
காயங்களும்
உனக்கு மட்டும் தான்
என்று நினைக்கிறாயா?
ஒவ்வொரு மனிதனுக்கும் தான்!....

துன்பங்களும்
தொல்லைகளும்
உன் வாழ்க்கையில்
மட்டுமே என்று
வெறுக்கிறாயா?
ஒவ்வொருவர் வாழ்கையிளும் தான் !...

மகிழ்ச்சி என்பது பற்றாக்குறை தான்
மனித உள்ளத்திற்கு எட்டாக் கனி தான்!..

வீடுகள் தோறும்
வாசற்படி தான்!...
வாழ்க்கை என்றாலே இப்படிதான்!....

எழுதியவர் : தே.விஐயலட்சுமி (24-Jan-13, 9:56 pm)
சேர்த்தது : vijayalakshmi.D
Tanglish : vaazhkkai
பார்வை : 98

மேலே