வெளிச்சமாய் விடியல் வேண்டும்!
தேடிட பார்வை வேண்டும்
தேவையை உணர வேண்டும்
கூடிடும் மனங்கள் வேண்டும்..
கூச்சலைக் குறைத்திட வேண்டும்
நாடிடும் நட்பும் வேண்டும்
நாலையும் உணர்ந்திட வேண்டும்
விடுதலை எண்ணம் வேண்டும்
வெளிச்சமாய் விடியல் வேண்டும்!
அன்பினில் சொற்கள் வேண்டும்
ஆசையை அடைந்திட வேண்டும்
யாரென பார்க்காமல்
இயன்றதை செய்திட வேண்டும் !
காலத்தை தெரிந்திட வேண்டும்
கவலையை தொலைத்திட வேண்டும்!
ஞாலத்தை வென்றிடும் நோக்கில்
ஞாயத்தை காத்திடல் வேண்டும்!
வேண்டுமெனும் ஆசையும் வேண்டும் ..
வேண்டியதை விட்டுக் கொடுத்திடவும் வேண்டும்
நாளையென்ற சொல்லில்
நம்பிக்கை வைத்திடல் வேண்டும்..
நம்பிக்கைமட்டுந்தான் வாழ்க்கை
என்ற நம்பிக்கை என்றும் வேண்டும்!