ஒரு தாயின் புலம்பல்...

மணக்கும் மல்லி ஏடுத்து சரசரமாய் தொடுத்து வெச்சு
பருவ சிட்டுகிட்டு காலேஜிக்கு அனுப்பி வெச்சேன்
மல்லிகை வாடும் முன்ன என் மரிகொழுந்து கசங்கியதென்ன?
கோழி குஞ்சாட்டம் காத்த என் குலவெளக்க
சிறகுரிச்சு தொங்கவிட்ட பாவிக்கு சிறையில்லையோ?- இது
நா படிக்காத குத்தத்துக்கா? மகள படிக்கவெச்ச குத்தத்துக்கா?
அழகு பெத்த புள்ளனு அக்கம் பக்கம் சொன்னப்ப
கண்ணு பட்டு போகுமுனு சுத்தி சுத்தி போட்டேனே!
கசங்காம வளத்த கிளிய கருநரி கூட்டமொன்னு சிதச்சுடுச்சே
வடகத்தி மகளுக்கு தான் வழக்கும் நியாயமுமோ?
தெக்க பொறந்ததென்ன எங்க தலையில் எழுதிய குத்தகமோ?

எழுதியவர் : மொழியினியாள் (26-Jan-13, 9:58 pm)
சேர்த்தது : mozhiiniyaal
பார்வை : 151

மேலே