காட்டிக்கொடுப்பவை...

நிலம் பார்க்கும்
நீல விழிகளும்,

நகம் கடிக்கும்
நல்ல பற்களும்,

கட்டாந்தரையில்
கவிதை எழுதும் கால்
கட்டைவிரல்களும்,

கடித்தே நனைத்த
கலர்ச்சேலை முந்தானைகளும்

காட்டிக்கொடுக்கின்றன-
அவள்
கள்ளத்தனத்தைத்தான்,
உள்ளே
உள்ள தனைத்தையும்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Jan-13, 10:37 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 100

மேலே