!! சூர்யஒளியில் பனியாய் !!

புகைதனை இழுத்து....
"புதைந்து போகிறது"
இளைஞர்களின் வாழ்க்கை
இப்புவியில்....!!
மது என்னும் போதையில்...
கை கொடுக்க யாரும் இன்றி
மிதக்கிறது பலரின் வாழ்க்கை..!!
காதல் காமம்...
என்னும் கண்டது காண
மரிக்கிறது
இயல்பான உலகம்....!!
இக்கால இளைஞர்களின்,,,
"கருவிழி கனவுகள்"
"சூர்யஒளியில்
தென்பட்ட பனிகற்களை" போல
உருகி வீணாக போகிறது....!!
கனவுகள் எங்கும் காமம் தோன்ற....
களைந்து போகிறது
"கலாமின் கனவுகள்"...!!
ஏனோ இருட்டில் திரிகின்றனர் இளைஞர்கள்
தவறான பாதையில்....
விடியல் விடிய போவது
எப்பொழுதோ????
அவ்விடியலை நோக்கி....
"என் தேடல்"...!!