எழுத்து வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்...!
எழுத்து வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்...!
' முகநூல் 'உடனே விரைந்து செயல்படுங்கள்....!
முகநூலை எத்தனை பேர் தமிழில் பயன்படுத்துகின்றார்கள்? முகநூலில் மொழிபெயர்ப்புச் செயலிக்கான பக்கத்தில் உள்ள அறிவிப்பைப் பாருங்கள்!! "By helping translate Facebook, you are helping 56 of your friends who may be using it in தமிழ்." என்ன 56 பேர்தான் தமிழைப் பயன்படுத்துகின்றார்களா??!!
குறைந்தது 500,000 தமிழர்களாவது தமிழில் பயன்படுத்தியிருக்க வேண்டும்! தமிழில் பயன்படுத்தவில்லை எனில் அந்தச் சேவை கிட்டாமலே போகலாம். அருள்கூர்ந்து *உடனே* முகநூலில் மேற்பகுதியில், வலப்புறம் உள்ள பொத்தான்களில் சக்கரம் போல் தெரிவதைச் சொடுக்கி Account Settings என்னும் பகுதிக்குப் போய், அங்கு மொழியைத் தமிழ் என்று மாற்றுங்கள்!!
தமிழ் தமிழ் என்று பேசினால் போதாது. எளிதாகச் செய்யக்கூடிய இந்த மாற்றத்தைச் செய்யுங்கள்! முகநூலைத் தமிழில் பயன்படுத்துங்கள்! தமிழில் எழுதுவது வேறு தமிழில் தளத்தின் அமைப்புகளைப் பயன்படுத்தல் வேறு. நான் தமிழில்தான் பயன்படுத்துகின்றேன் பெரிய குறை ஏதும் இல்லை! ஒரு மில்லியன் தமிழர்கள் தமிழில் பயன்படுத்துகின்றார்கள் என்று அறிவிப்பு வரவேண்டும்!!