விஸ்வரூபம்...

விஸ்வரூபம்...இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்றும் சட்ட ஒழுங்கு பிரச்னை வரும் என்றும் இஸ்லாமியத் தோழர்கள் கொந்தளித்த படி இருக்கிறார்கள்.
இதில் அவர்கள் தோழன் என்ற முறையில்...
என் கருத்துக்கள்...
நண்பர்களே ...அது ஒரு படம்..அவ்வளவே.
அதனால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்பது வீண் எண்ணம்.மேலும் உங்களுக்கு பிடிக்காது என பாகற்காயை சந்தையில் விற்கக் கூடாது என்பது தவறு..

மேலும்..இந்தப் படம்...ஆப்கனின் தாலிபான்கள் பற்றியது.....
தாலிபான்கள் இஸ்லாமியர்கள் என்று நீங்கள் வாதிட்டால் தவறு....
குரான் ஓதுவதாலும் தொழுகை புரிவதாலும் அவர்கள் இஸ்லாமியர்கள் ஆகிட மாட்டார்கள்....
குரானின் வழி நடப்பவரும் சக மனிதரை மதிப்பவரும் மட்டுமே இஸ்லாமியர்கள்...
கொல்பவர்கள் அல்ல...சமீபத்தில் ஆப்கனில் ஒரு தொழுகை கூடம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது...குரானும் கையுமாக....தொழுகும் நோக்கோடு சென்ற பலரும்...ஒழுகினார்கள் ...அவர்கள் குருதியை...அவர்களில் ஒருவனாகவே குரானோடு வந்த தலிபான் தான் இதை செய்தது...
இதையே படமும் சித்தரிக்கிறது....இதை தவறு என்று எப்படி சொல்கிறீர்கள்?
ஒரு படத்தால் நம் ஒற்றுமை நீங்கும் எனில்...
அது அறிவின்மையே அன்றி வேறில்லை...
உண்மையில் தோழர்களே.....
இதுவெல்லாம் உங்களுக்கும் தெரியும் தானே....தசாவதாரம் படத்தில் ...அல்லாவின் கோவில் பலரை காப்பாற்றும் இடமாக காட்டிய ..அந்த கலைஞனுக்கு இது தான் நீங்கள் செய்யும் நியாயமா?கொடும்பாவி எரிப்பதும்...கல் எறிவதும்...அகிம்சையின் கணக்கில் எப்போது இணைந்தன?தர்மம் போதிக்கும் குரானின் சாட்சியாய் சொல்லுங்கள்...இதில் அரசியல் இல்லை என்று...கனி மரத்தின் மேல் கல் எரியும் செயல் இல்லை என்று...மனம் ஒப்பும் நல்லவர்களோடு ஒப்பாதவர்க்கும் நன்றி...ஒப்பில்லாத இறைவன் பார்த்த படி இருக்கிறான் என்பதை மறவாதீர்கள்....

எழுதியவர் : (28-Jan-13, 7:59 pm)
பார்வை : 93

மேலே