(3) தந்திர காட்டில் நான் ( 1.திக்குதெரியாத காட்டினிலே)

************1.திக்குதெரியாத காட்டினிலே************

-----------------(தொடர்ச்சி )--------------
' ஹம் ' மென்று மௌனம் எனை
போர்வை போல் போர்த்த !
'ஜம்' மென்று உறக்கம் என்
மேனியை தழுவ!
'விர்' ரென்று வேகம் மிக
வேகமாய் நகர !
'சர்' றென்று இரவு அக்காட்டினை
அணைக்க !
'உஸ்'என்று மரமும் இரவில்
ஒலி இசைக்க !
'சட்'டென்று என்தூக்கம்
களைந்து கண் விழிக்க !
தகிட தகிட தோம்த தகிட
திகிட திகிட தீம்த திகிட !
காட்டின் பேரிசைக்கு
நட்சத்திரம் நாட்டியம்
அமைக்க !
இசை போர்த்திய புது காடு -அவ்விசைக்கு
ஏது புது ஈடு !

*****************(தொடரும் )***************

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (28-Jan-13, 9:06 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 122

மேலே