பிரம்மனுக்கு ஓர் கேள்வி?

மகளிர்க்கு மட்டும்
மாதம் ஒருமுறை
விலக்கு
ஆடவருக்கு?

மகளிர்க்கு மட்டும்
மேலாடை அணிய
வேண்டிய நிர்பந்தம்
ஆடவருக்கு?

மகளிர்க்கு மட்டும்
கருவை சுமக்க
வேண்டிய கட்டாயம்
ஆடவருக்கு?

டேய் பிரம்மா
உன்னிடம் ஓர்
கேள்வி?
உன்னுடைய படைப்பில்
இத்தனை பாரபட்சம்
ஏன்?
ஒருவேளை நீ
ஒரு ஆண் என
நம்ம்பப்படுவதால் தானோ

எழுதியவர் : வினோயோகி (30-Jan-13, 6:29 pm)
சேர்த்தது : Vinotha
பார்வை : 122

மேலே