ஊ(கூ)டல்

உன்
கள்ளச்சிரிப்பில் வெல்கிறாய்-
என் கோபங்களை ...!

உன்
செல்லச்சிணுங்கல்களில் தொலைக்கிறாய்
நீ ஏற்படுத்திய காயங்களை...!

அதிகம்
நேசிக்க வைக்கிறாய் உன்
குழந்தை தனமான பேச்சில்...!

செய்த
பிழைகளை திருத்திக்கொள்வதாக
வாக்குறுதி கொடுக்கிறாய்-
மன்னிப்போடு...!

அடுத்த கணமே
மறந்து விடுகிறாய் நமக்குள்
நடந்த ஊடலையே...!

மீண்டும்
மன்னிப்போடு நிற்கிறாய் சிறுபிள்ளை
போல்-அதே தவறுக்காக...!

உன்னை
வெறுக்க இயலவில்லை
இப்போது...!

என்னை
சிரிக்க வைக்கிறது உன்
செய்கைகள்...!

உன்னை
அதிகம் நேசிக்க துவங்குகிறேன்-
நம் ஒவ்வொரு ஊடலின்
முடிவிலும்...!

எழுதியவர் : ramyadharshini (31-Jan-13, 5:19 am)
பார்வை : 158

மேலே