பிரசவம்

பூமி சற்று குலுங்கிக் கொள்கிறது

விதைக்குள்ளிருக்கும் உயிர்ப்பு
சிலிர்த்துக் கொள்கிறது

முட்டைக்குள்ளிருக்கும் குஞ்சு
கரணம் பாய்கிறது

மழையை தாங்கிய மேகம்
அலைந்து கொண்டிருக்கிறது

வயல்வெளி விளைச்சலுக்காய்
பொறுமையிழந்து தவிக்கிறது

பூ விரியக் காத்திருக்கிறது
காற்றோடு கலக்கும் மணம்

பொறி தட்டிய கருவொன்று
மீன் முள்ளாகிறது மனதிற்குள்

பிரசவ வேதனைதானோ
கவிதை வெளிப்பாடும் !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (31-Jan-13, 4:28 pm)
பார்வை : 201

மேலே