காலம் செய்த குற்றம்
காலம் காலமாய் சொல்லிடுவர்
காரணம் எதுவானாலும் இதனை
காரியம் முடிந்தால் சொல்லிடுவர்
காலம் தந்த பரிசு என்று
இயலாத காரியத்தால் இயம்புவர்
கால நேரம் சரியில்லை என்று
முன்னரே முடிக்கலாம் என்றால்
காலம் வரும் காத்திருப்போம் என்பர்
திட்டமிட்டும் நடக்காத நிகழ்வுகளை
காலம் கைகொடுக்கவில்லை என்பர்
காலத்தை குறை சொல்லியே பலர்
காலத்தை கழிப்பர் கலியுகத்தில்
காலம் செய்த குற்றம்தான் என்ன
காலம் வரும் காலமே விளக்கிடும் !
பழனி குமார்